Archive for the ‘General’ Category

சிகரெட்டில் வெற்று பேக் முறையைக் கொண்டு வாருங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 30.5.2016 ஜூன் 2009லிருந்து மலேசியா சிகரெட்டு பேக்கட்டுக்களில் படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்து வெளியிட்டது. அதிலிருந்து சுமார் 92.8 விழுக்காட்டினர் (93.2 விழுக்காடு ஆண்கள், 74.7 விழுக்காடு பெண்கள்) இந்த எச்சரிக்கை வாசகங்களை உற்று கவனித்துள்ளதாக மலேசிய அனைத்துலக புகையிலை ஆய்வகம் (GATS) அறிவித்துள்ளது. அபாய படத்தோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பலன் தரக்கூடியவை என்பதையே இது காட்டுகிறது. வேறு பல நாடுகளுள் இந்த முறையை அமலாக்கம் செய்துள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் [...]

மரங்களைக் காப்போம்! ஜாலான் மஸ்ஜிட் நெரிகிரியில் மரங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துங்கள்!

பத்திரிகைச் செய்தி 16.2.2016 பினாங்கு, ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 1.8 தூரத்திற்கு சாலையை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பினாங்கு நகராண்மைக் கழகத்திடமும், பினாங்கு மாநில அரசாங்கத்திடமும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். ஸ்காட்லாந்து சாலை, லோரோங் பாத்து லான்சாங் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு மற்றும் ஜாலான் ஆயர் ஈத்தாம் – ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சந்திப்பு ஆகிய இடங்களில் 33 மரங்கள் அகற்றப்படவிருப்பதாக இருந்து, [...]

பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை தோட்டத்தில் வெளியீடு கண்டது நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு நூல்

நம்மாழ்வார் உலகம் முழுவதிலுமுள்ள, குறிப்பாக இந்தியாவின் கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உதடுகளால் உச்சரிக்கப்படும் பெயர். இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலுள்ள இந்திய, சீன மற்றும் மலாய்க்கார விவசாயிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப மாதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஜீவன் நம்மாழ்வார். விவசாயத்தில் இயற்கைப் புரட்சியை ஏற்படுத்திக்கொடுத்த அந்த மாமனிதரை மலேசியாவிலுள்ள சீன வம்சாவளியைச் சேர்ந்த விவசாயிகள் சீ·பு (sifu) என்றே அழைக்கின்றனர். அதன் உண்மையான அர்த்தம் நம்மாழ்வார் இயற்கைவிவசாயத்தின் குரு என்பதேயாகும்.நம்மாழ்வாரின் எளிமையான அணுகுமுறை, ஆனால் [...]

5ம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் நரம்பை அடிக்கும் நஞ்சு ________________________________

பத்திரிகைச் செய்தி 4.10.2015 “நியோ நிக்கோடினாய்ட்” (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, சாப்பிட விடாமல் செய்வது. வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது என பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளை விதையுடன் கலந்து மற்றும் பயிரில் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று [...]

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் வேண்டும்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாத ஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்து விட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மை மற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். நிலத்தை குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான [...]

போபால் விஷவாயுக் கசிவு 20 ஆயிரம் உயிர்கள் பலியாகின இலட்சக்கணக்கானோர் பரிதவிக்கின்றனர்

போபால் விஷவாயுக் கசிவு சம்பவம்நடந்து 29 ஆண்டுகள் மறைகின்றன. டிசம்பர் 2ம் தேதி 1984ம் ஆண்டு உலகவரலாற்றில் ஒரு கறுப்பு தினம். யூனியன் கார்பாடு இந்தியாநிறுவனத்திலிருந்து வெளியான மிக என்ற விஷவாயு கசிவால் இன்று வரை 20ஆயிரம் பரிதாபமாக இறந்திருக்கின்றனர். இதில் பலர் புழுப்பூச்சிகள் போல்துடிக்கத் துடிக்க இறந்தனர். நிரந்த குருடர்களாக நடமாடுபவர்களின்எண்ணிக்கை நான்கு லட்சம் பேர் என அண்மைய பட்டியல் கூறுகின்றது.29 ஆண்டுகளுக்கு முன்பு விஷவாயுவை சுவாசித்து உயிர் பிழைத்த பெண்களின் இன்றைய நிலை கண்ணீரைவரவழைக்கின்றது.இவர்களுக்குப் [...]

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்து அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்களையும் பி.ப.சங்க நடவடிக்கைகளையும் கேட்டறிந்து மகிழ்ச்சியடைந்தார். பி.ப.சங்கம் மேற்கொண்டு வரும் இயற்கை விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளை பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் விளக்கிக் கூறியதை பேராசிரியர் மனநிறைவோடு கேட்டார். என்.வி.சுப்பாராவ் கல்வி அதிகாரி

பட்டாசு வெடித்து காசைக் கரியாக்காதீர்கள்! சட்ட விரோதமாக பட்டாசுகளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பட்டாசுகள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்படுவதையும் அவை நம் நாட்டில் சர்வசாதாரணமாக விற்கப்படுவதையும் கட்டுப்படுத்தும் பொருட்டு சுங்க சுங்க வரி இலாகாவும் காவல் துறையும் தக்க நடவடிக்கையில் இறங்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார். சட்டம் இருக்கும்பொழுது அதை முறையாக அமல்படுத்தினால் இந்த சட்ட விரோத பட்டாசு கடத்தல்களை முறியடிக்க முடியும். இவ்வாறான பட்டாசு கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனையோடு கடும் தண்டனை விதிக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் [...]

அனைத்துலக நெகிழி மறுப்பு நாளை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உலகில் உள்ள மற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் போன்று நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரிகள், ஆர்வலர்கள் மற்றும் பினாங்கு, மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஒன்றிணைந்து பினாங்கில் உள்ள பாயான் பாரு சந்தையில் மறுபயனீடுப் பைகளை இலவசமாக விநியோகித்தனர். இந்தப் பைகள் பினாங்கு, மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியின் மாணவிகளால் பயன்படுத்திய டீ-சட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டவையாகும். [...]

சின்ன வெங்காயம் சொந்தமாகவே விளைவிக்கலாம் இறக்குமதியைக் குறைக்கலாம்

மலேசியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் சின்ன வெங்காயத்தை மலேசிய விவசாயிகளே பயிரிட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார். சின்ன வெங்காயத்தை ரோஸ் வெங்காயம் என்றே இங்கு வியாபாரிகள் பெருவாரியாக அழைக்கின்றனர். மலேசிய விவசாயிகள் வெங்காயம் வளர்ப்பது அதனுடைய வெங்காயத் தாளுக்காக மட்டும்தான் என்றார் இத்ரிஸ். மலேசியர்களின் உணவுகளில் குறிப்பாக கறி வகைகளில் சின்ன வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் ருசியில் மேலோங்கி இருப்பதால் அது [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME