Archive for the ‘இயற்கை வேளாண்மை / Natural Farming’ Category

மர அழிவைத் தடுப்போம்! மரம் நடுவதை ஊக்குவிப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புவி தின அனுசரிப்பு

பத்திரிகைச் செய்தி 22.4.2016 நம் பூமியில் ஒவ்வொரு வருடமும் 15 பில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிமிடத்திற்கு 48 காற்பந்து விளையாட்டுத் திடலை இழப்பதற்குச் சமமான அளவாகும். இந்த மர அழிவு சூழலுக்கு இழைக்கப்படும் ஒரு பெரிய வன்முறை. மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டுவது, வியாபார நோக்கிலான பெரிய அளவிலான மறுநடவு, நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இந்நிலைமையைக் [...]

விதைகளை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவியுங்கள்

தை ஒரு விவசாயியின் பொக்கிஷம். பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் விதைகளைக் கண்காணித்து, தேர்வு செய்து, பாதுகாத்து, பேணி வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு நூற்றாண்டு காலமாக உலகம் முழுக்கம் விதைகளின் பல்வகைமையில் பெருத்த இறக்கம் ஏற்பட்டுள்ளது. 2010ல் மட்டும் உலகின் விதைகளின் பல்வகைமை 75% இழக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிர்வாகம் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது. வேளாண் தொழிற்துறை மற்றும் அதனை ஆதரிக்கும் கொள்கைகளும் வேளாண் பல்வகைமைக்கு பெரிய உறுத்தலாக அமைந்து வருகிறது. விவசாயத்திற்குத் தேவையான [...]

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் காப்போம்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாதஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்துவிட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மைமற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும்வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருகிறது.நிலத்தைக் குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான வானிலை, மண் நிர்வகிப்புக்கோளாறுகள் ஆகியவற்றின் காரணமாக மண்ணின் தரம் கெட்டுப்போய்விட்டது.ஒரே வகையான பயிர்களை நடுதல்,மேம்பாட்டுத் திட்டத்திற்காககாடுகளை [...]

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் நகர்ப்புற விவசாய திட்டத்தை விவசாய அமைச்சர் திறந்து வைத்தார்

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்கள் ஆற்றிய உரை உலகம் முழுக்க நகர்ப்புற விவசாயம் பிரபலமாகி வருகிறது. மலேசியாவிலும் மக்கள் நகர்ப்புற விவசாயத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். வீட்டுக்குப் பின் புறத்தில், கூரையின் மீது, மாடி முகப்பு, சாலை μரத்தில் விவசாயத்தை மேற்கொள்வது ஆகியவை நகர்ப்புற விவசாய முறைகளாகும். உலகம் முழுக்க மக்கள் உண்ணும் மொத்த உணவில் 15% நகர்ப்புறத்திலேயே விளைவிக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புக்கு நகர்ப்புற விவசாயம் ஆதாரமாக இருப்பதோடு [...]

கால்நடைப்பண்ணைகளில் எண்டிபையோட்டிக்

பண்ணைகளில் வளர்ப்புப்பிராணிகளிடையே நோயைத்தடுப்பதற்காக நிறைய எண்டிபையோட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்ணைகளில் பிராணிகள் நெருக்கடியாகவும், அசுத்தமான நிலையிலும், அவற்றுக்கும்அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலையிலும் வளர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்டபிராணிகளுக்கு நோய் தாக்காமல்இருக்க அவற்றின் தீனியில், நீரில் எண்டிபையோட்டிக் கலந்து கொடுக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு மிகவும் குறைவான அளவில் கொடுக்கப்படும் இந்த எண்டிபையோட்டிக்குகள் பண்ணைப் பிராணிகளிடையே உள்ள கிருமிகளிடையே எண்டி- பையோட்டிக்குகளை எதிர்க்கும் தன்மையை வளர்த்துவிடுகின்றன. பண்ணைகளில் இருக்கும் ஒருபிராணிக்கு நோய் வந்தாலேஎல்லாவற்றுக்குமே எண்டிபையோட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். இது எல்லாப் வளர்ப்புப் பிராணிகளுக்கும் நோய்வந்து பண்ணையாளருக்கு இழப்பு ஏற்படும் [...]

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் வேண்டும்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாத ஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்து விட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மை மற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். நிலத்தை குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான [...]

குடிக்கும் நீர் சுத்தமானதாக பாதுகாப்பானதாக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் நீர் சுத்தமானதாக ஆரோக்கியமானதாக இருக்கும் பொருட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, உணவு சட்டம் 1985ல் சில விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிமுறைகளை சுகாதார அமைச்சு இன்னும் முறையாக அமலாக்கம் செய்யாதது குறித்து தாம் அதிர்ச்சி அடைவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளின் காரணமாக விற்பனை இயந்திரங்களிலிருந்து மக்கள் கொணரும் நீரில் ஆபத்தான பாக்டீரியாக்களும் இருப்பதாக பத்திரிகைச் செய்திகளிலிருந்து [...]

உங்கள் குரலை உயர்த்துங்கள்! கடல் மட்டத்தை அல்ல! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாகும். இந்த வருட உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் “உங்கள் குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல” என்பதாகும். சீதோஷ்ண மாறுதல் மற்றும் சிறிய தீவுகளை முன்னிலைப்படுத்தி இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 1901வரை கடல் மேற்பரப்பின் சீதோஷ்ண நிலை 1oC உஷ்ணம் அதிகரித்துள்ளது. இதற்கு மனித நடவடிக்கைகளே காரணமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். மலேசியாவில் இருக்கும் நாம் சீதோஷ்ண மாறுதலுக்கும் கடல் மட்டம் உயர்வதற்கும் [...]

சின்ன வெங்காயம் சொந்தமாகவே விளைவிக்கலாம் இறக்குமதியைக் குறைக்கலாம்

மலேசியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் சின்ன வெங்காயத்தை மலேசிய விவசாயிகளே பயிரிட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார். சின்ன வெங்காயத்தை ரோஸ் வெங்காயம் என்றே இங்கு வியாபாரிகள் பெருவாரியாக அழைக்கின்றனர். மலேசிய விவசாயிகள் வெங்காயம் வளர்ப்பது அதனுடைய வெங்காயத் தாளுக்காக மட்டும்தான் என்றார் இத்ரிஸ். மலேசியர்களின் உணவுகளில் குறிப்பாக கறி வகைகளில் சின்ன வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் ருசியில் மேலோங்கி இருப்பதால் அது [...]

பினாங்கில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் கவலையைத் தருகிறது என்கிறது பி.ப.சங்கம்

கடந்த சில ஆண்டு காலமாக பினாங்கு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வந்துள்ளன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது. பினாங்கிலுள்ள ஆறுகள் மற்றும் கடலின் தூய்மைக்கேடு, மலைகளில் அதிகரித்து வரும் மேம்பாட்டுத் திட்டங்கள், அதனால் நிகழ்கின்ற மண் சரிவு சம்பவங்கள், கடுமையான மழையால் ஏற்படுகின்ற வெள்ளப் பிரச்னை, தூய்மைக்கேட்டினால் ஏற்படுகின்ற மோசமான காற்றின் தரம், கால்வாய் மற்றும் சாக்கடைகளின் துர்நாற்றம், அதிகரித்து வரும் கழிவுகள் ஆகியவை பினாங்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் என [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME