Archive for the ‘பத்திரிக்கைச் செய்திகள் / Press Statements’ Category

மர அழிவைத் தடுப்போம்! மரம் நடுவதை ஊக்குவிப்போம்! பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புவி தின அனுசரிப்பு

பத்திரிகைச் செய்தி 22.4.2016 நம் பூமியில் ஒவ்வொரு வருடமும் 15 பில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிமிடத்திற்கு 48 காற்பந்து விளையாட்டுத் திடலை இழப்பதற்குச் சமமான அளவாகும். இந்த மர அழிவு சூழலுக்கு இழைக்கப்படும் ஒரு பெரிய வன்முறை. மலேசியாவில் அரிய பொக்கிஷமான மரங்கள், மேம்பாடு என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டுவது, வியாபார நோக்கிலான பெரிய அளவிலான மறுநடவு, நகர்ப்புறமயமாக்கம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையே மர அழிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இந்நிலைமையைக் [...]

நிராகரிக்கப்பட்ட விலைக்குப் போகாத தேங்காய்கள் 2 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம் பி.ப.சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 20.1.2016 தைப்பூசம் நெருங்க நெருங்க, தேங்காய்களின் விலையும் உயர்ந்துக்கொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது. அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் ஒரு சில வியாபாரிகள் பக்தர்களிடம் ஏமாற்றி விற்று விடுவதாகவும் பி.ப.சங்க கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். (தைப்பூசத்திற்குப் உடைக்கப்படும் தேங்காய்களுடன் என்.வி.சுப்பாராவ்) மொத்தமாக பைகளில் வாங்கும்பொழுது அதனுள் நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சேர்த்து விற்றுவிடுகிறார்கள் என்று அவர் கூறினார். ஒரு பையில் 50 தேங்காய்களைக் [...]

வாழ்க்கையை சீரழிக்கும் மின்சிகரெட், சீஷா போதையில் இளைஞர்கள் : அமைச்சு இதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்

பத்திரிகைச் செய்தி 4.12.2015 மின்-சிகரெட் மற்றும் வேப்பிங்கை முற்றிலும் தடை செய்வதற்குப் பதிலாக அதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கும் மலேசிய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சியை அளித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முகம்மது இத்ரிஸ் கூறினார். (Click the photo to view video) இந்நாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலம் சீரிழியாமல் இருக்க வேண்டுமானால் மின்-சிகரெட் மற்றும் வேப்பிங் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்றார் அவர். இவ்விடயத்தில் அமைச்சரவையின் இந்த அலட்சியப்போக்கு இன்னும் நிறைய [...]

நம்மையும் பூமியையும் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தவிருங்கள்

பத்திரிகைச் செய்தி 26.11.2015 நம்முடைய ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பயனீட்டாளர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். இறைச்சி உட்கொள்வது குறிப்பாக பதனம் செய்யப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது வயிறு-பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக புற்றுநோய் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அனைத்துலக மையம் ஒன்று கூறுகிறது. இவற்றில் உப்பு சேர்க்கப்பட்ட, புளிக்கவைக்கப்பட்ட, புகைமூட்டம் செய்யப்பட்ட ஹோட் டோக்ஸ், சோசேஜ், மாட்டிறைச்சி, [...]

உங்கள் குரலை உயர்த்துங்கள்! கடல் மட்டத்தை அல்ல! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாகும். இந்த வருட உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் “உங்கள் குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல” என்பதாகும். சீதோஷ்ண மாறுதல் மற்றும் சிறிய தீவுகளை முன்னிலைப்படுத்தி இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 1901வரை கடல் மேற்பரப்பின் சீதோஷ்ண நிலை 1oC உஷ்ணம் அதிகரித்துள்ளது. இதற்கு மனித நடவடிக்கைகளே காரணமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். மலேசியாவில் இருக்கும் நாம் சீதோஷ்ண மாறுதலுக்கும் கடல் மட்டம் உயர்வதற்கும் [...]

சாலை விபத்துக்களைக் குறைக்க விவேகமாக செயலாற்ற வேண்டும்

மலேசிய அரசாங்கம் சாலை விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு மில்லியன் கணக்கில் செலவு செய்தாலும் கூட,  சாலை விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். 2003ல் சாலை விபத்தின் மூலம் ஏற்பட்ட இறப்புக்கள் 6,286 ஆக இருந்தன.  2012ல் இந்த இறப்புக்கள் 6,877 ஆக அதிகரித்துள்ளன.   2003ல் மொத்த சாலை விபத்துக்கள் 298, 653 ஆகும்.  இது 2012ல் 442,423 என்ற எண்ணிக்கையில் பெருகி  இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்றார் [...]

அழகு அறுவைச் சிகிச்சையை முறைப்படுத்துங்கள்

மலேசியாவில் பெருகிக்கொண்டே போகும் அழகு அறுவைச் சிகிச்சைகளை சுகாதார அமைச்சு கண்காணிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைக்கு மலேசியாவில் யார் வேண்டுமானாலும் முக, உடல் பாகங்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அழகு படுத்தும் வேலைகளை செய்து வருகிறார்கள். இப்படி செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகளினால் யாராவது பாதிக்கப்பட்டால் தற்போதுள்ள சூழ்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மீது எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. அழகு சிகிச்சைக்கு ஆளானவருக்கு உடல் உறுப்புக்கள் [...]

மின்னியல் விளம்பரப் பலகைகளில் ஆபாசப் படங்கள்

பினாங்கு பர்மா சாலையில் இரவு விடுதி ஒன்றால் நிறுவப்பட்டு மிகவும் ஆபாசமாகக் காட்சியளிக்கும் மின்னியல் விளம்பரப் பலகையை அகற்றுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு நகராண்மைக் கழகத்திற்கும் பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். இந்த மின் விளம்பரப் பலகையில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு காட்சி தருகின்றனர். இந்த விளம்பரத்தில் ஓர் இ சைக்குழுவின் நிகழ்ச்சி அறிவிப்பைச் சேர்த்து பெண்கள் அரைகுறை ஆடையோடு காட்சி தந்தனர். இவ்வாறு அரைகுறை [...]

மேம்பட்ட தண்ணீர் விநியோகத்திற்கு உதவித் தொகையை நீக்குங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பயனீட்டாளர்களுக்கு தண்ணீர் விநியோகத்திற்காக உதவித் தொகை கொடுப்பது என்பது தேவையில்லாத ஒன்று. பினாங்கில் தண்ணீர் உபயோகத்திற்காக கொடுக்கப்படும் உதவித் தொகை சென்ற வருடத்தில் மட்டும் மவெ. 41 மில்லியனை எட்டியுள்ளது அதிர்ச்சி தரும் செய்தியாக இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். உதவித் தொகை கொடுக்கப்படும் பட்சத்தில் தண்ணீரின் மதிப்பு அறியாத பயனீட்டாளர்கள் அதனை சிக்கனமாகப் பயன்படுத்த மாட்டார்கள். தண்ணீரை மிகவும் மலிவான விலையில் அளிப்பதும் பிரச்னையைத் தீர்க்க உதவாது. தண்ணீர் விலை [...]

சிந்தியுங்கள். சாப்பிடுங்கள். சேமியுங்கள். உணவைச் விரயமாக்காதீர்!

உலக சுற்றுச்சூழல் தினம் 2013ஐ அனுசரிக்கும் பொருட்டு உணவை விரயமாக்க வேண்டாம் என்று பயனீட்டாளர்களுக்கு கோரிக்கை விடுப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார். இந்த வருட உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் சிந்தியுங்கள். சாப்பிடுங்கள்.சேமியுங்கள். இங்கு சேமிப்பது என்பதே உணவை விரயமாக்காமல் இருப்பதுதான். ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளாண்மை சங்கத்தின் (FAO) கணிப்புப்படி ஒவ்வொரு வருடமும் விரயமாகும் உணவின் அளவு 1.3 பில்லியன் ஆகும். ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உணவும் [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME