Archive for the ‘என்.வி.சுப்பாராவ் / NV.Subbarow’ Category

நிராகரிக்கப்பட்ட விலைக்குப் போகாத தேங்காய்கள் 2 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம் பி.ப.சங்கம் வேண்டுகோள்

பத்திரிகைச் செய்தி 20.1.2016 தைப்பூசம் நெருங்க நெருங்க, தேங்காய்களின் விலையும் உயர்ந்துக்கொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது. அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் ஒரு சில வியாபாரிகள் பக்தர்களிடம் ஏமாற்றி விற்று விடுவதாகவும் பி.ப.சங்க கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். (தைப்பூசத்திற்குப் உடைக்கப்படும் தேங்காய்களுடன் என்.வி.சுப்பாராவ்) மொத்தமாக பைகளில் வாங்கும்பொழுது அதனுள் நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சேர்த்து விற்றுவிடுகிறார்கள் என்று அவர் கூறினார். ஒரு பையில் 50 தேங்காய்களைக் [...]

கோழைத்தனமான காட்சிகள் நிறுத்தப்படாத வரையில் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் பி.ப.சங்கம் எச்சரிக்கை

தோல்வியை அல்லது இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் கோழைத்தனம் இந்தியர்களிடையே அதிக அளவு காணப்பட்டு வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது. கோழைத்தனமான தற்கொலை சம்பவங்கள் மிக அதிக அளவில் திரைப்படங்களிலும், தொடர்நாடகங்களிலும் காண்பிக்கப்பட்டு வருவது இது போன்ற தற்கொலை சம்பவங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். வெகுஜன சாதனங்களான திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் காட்டப்படுகின்ற போலியான, கோழைத்தனமான காட்சிகளைப் பார்த்து சிலர் அப்படித்தான் வாழ்க்கை,  அதுதான் தலைவிதி [...]

நீரிழிவு நோய் – அமைதியான உயிர்கொல்லி அதிகமான இளையோர்களைத் தாக்குகிறது

சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது.  இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் [...]

காந்தி பெயர் கொண்ட தமிழ்ப்பள்ளி மது நிறுவனத்திடமிருந்து அன்பளிப்பைப் பெறுவதா? மது நிறுவனங்களிடமிருந்து புத்தகப்பையை அன்பளிப்பாகப் பெறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு சுப்பாராவ் பணிவான வேண்டுகோள்

மதுபான நிறுவனம் வழங்கும் புத்தகப்பை அன்பளிப்பை தமிழ்ப்பள்ளிகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. கல்விக் கலாசாலையில் மது நிறுவனங்களின் ஊடுருவலால் மது பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை மாணவர்களிடையே விதைத்துவிடும் என்று என பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். தமிழ்ப்பள்ளிகளுக்கு புத்தகப்பைகளை மது நிறுவனம் வழங்குவது என்பது இப்பொழுது புதிய கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அதுவும் 7 வயது மாணவர்களுக்கு இந்த புத்தகப்பைகளை எடுத்து வழங்குகின்றார்கள். இது பிற்காலத்தில் எப்படிப்பட்ட [...]

கணித மேதை ஜாதகம் பார்ப்பது ஏன்? ஆலோசனை வழங்காமல் பணம் வசூலிப்பது ஏன்? பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி

  மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள பலராலும் பாராட்டப்படுகின்ற பிரபல கணித மேதை சகுந்தலாதேவி ஜாதகம் பார்த்து பணம் வசூல் வேட்டையில் இறங்கியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சகுந்தலா தேவி என்ற பெயரைச் சொன்னாலே மரியாதையோடு பார்க்கும் பலருக்கு, அவரது ஜாதகம் வழங்கும் விளம்பரம் மனவருத்தத்தைத் தருவதாக பல பயனீட்டாளர்கள் பினாங்கு பயனீ்ட்டாளர் சங்கத்திடம் புகார் கூறியிருப்பதாக அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார். திருமதி சகுந்தலா தேவி தன்னிடமிருக்கும் கணிதம் தொடர்பான [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME