`

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் காப்போம்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாதஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்துவிட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மைமற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும்வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருகிறது.நிலத்தைக் குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான வானிலை, மண் நிர்வகிப்புக்கோளாறுகள் ஆகியவற்றின் காரணமாக மண்ணின் தரம் கெட்டுப்போய்விட்டது.ஒரே வகையான பயிர்களை நடுதல்,மேம்பாட்டுத் திட்டத்திற்காககாடுகளை அழித்தல், மற்றும் மனிதர்களின் அளவிலாத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகஉணவு மற்றும் சக்தி உற்பத்திக்காக காட்டு வளங்களைச் சுரண்டுதல் ஆகிய செயல்பாடுகள் மண்வளத்தை வழித்தெடுத்துவிட்டன. ஒரு செண்டிமீட்டர் மண்உருவாகுவதற்கு 1,000 வருடங்கள் பிடிக்கும் என்று இப்படி மண்ணின்வளத்தைச் சுரண்டுபவர்களுக்குத் தெரிவதில்லை.

22 ஏப்ரல் உலக மண் தினமாகும். இவ்வருட கருப்பொருள் “வழி நடத்துவது நம்முடைய முறையாகும்”.

ஐநா பொதுக்கூட்டம் 2015ம் வருடத்தை மண் அனைத்துலக தினமாக அறிவித்திருக்கின்ற காரணத்தால், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மலேசியாவில் நிகழும் மண் தரக்கேட்டை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்க முடிவு செய்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் உள்ள மண்ணின் தரத்தை ஆய்வு செய்துள்ளது. மலேசியாவில் மண்ணின் தரம் தொடர்பான முழுமையான ஆய்வு இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு அவசியமாகும். மலேசிய மண்ணில் அளவுக்கு அதிகமான இரசாயனங்களைக் கொட்டுவது தேவைதானா என்று ஆராயப்பட்டது. வடக்கு மாநிலங்களிலிருந்து சுமார் 10 விளைநிலங்களில் செய்யப்பட்ட மண் ஆய்வில் இப்படி இரசாயன உரங்களைக் கொட்டுவது தேவையற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 வெவ்வேறு நிலங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகள், தங்கள் நிலங்களில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதே நேரத்தில் தங்கள் நிலத்தை மேம்படுத்த, மண் நுண்சத்துக்களை அதிகரிக்க இயற்கையான எருக்களையும் பயன்படுத்தி வருகின்றனர். மண் நுண்சத்துக்களை அதிகரிக்க இயற்கையான எருக்கள் உதவி செய்கின்றன என்று அவர்கள் நம்பும் பட்சத்தில் இந்த செயற்கை இரசாயன உரத்தின் தேவை ஏன் ஏற்பட்டது என்று கேள்வி எழுகிறது. உலகிலேயே அளவுக்கு அதிகமான உரத்தை ஆசிய நாடுகளே பயன்படுத்துகின்றன.
உலக அளவில் பயன்படுத்தப்படும் மொத்த உரத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துவது 58.5 விழுக்காடு ஆகும். மலேசியாவில் பயன்படுத்தப்படும் உரங்களில் தாது உரங்கள் மட்டும் 90 விழுக்காடு இடத்தை எடுத்துக்கொண்டுள்ளன.

இவற்றில் யூரியா, அம்மோனியம் சல்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட், போஸ்பேட் உப்பு, சூப்பர் போஸ்பேட், அம்மோனியம் போஸ்பேட், பொட்டேஸியம் குளோரைட், பொட்டேஸ ¢யம் சல்பேட் மற்றும் என்.பி.கே, என்.பி மற்றும் பி.கே. அடங்கிய உரங்களும் அடங்கும். 2012ல் மட்டும் மலேசியாவில் ஒரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கு 1,570.7 கிலோகிராம் இரசாயன உரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரசாயன உரங்கள் சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கும் பாதிப்புக்கள் அச்சமூட்டுவதாக உள்ளன. செயற்கை நைட்ரோஜன்கள் மண்ணின் மக்குரம் (humus) மற்றும் பல்லுயிர்த்தன்மையைக் கெடுத்து, மண்ணை அமிலத்தன்மையுள்ளதாக்கி நைட்ரஸ் ஒக்சைட்டினை வெளிப்படுத்துகின்றன. இது பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்தி சீதோஷ்ண மாறுதலுக்கு இட்டுச் செல்கிறது. இதுவே எதிர்கால உணவு உற்பத்தியைப் பாதிக்கிறது. மண்ணின் அமிலத்தன்மை அதிகமாகும்பொழுது பயிர்கள் போஸ்பேட்டை ஈர்த்துக்கொள்வது குறைந்துபோகிறது. இது மண்ணின் நச்சு மின்னணுக்களை (ions) அதிகமாக்கி பயிர் வளர்ச்சியைத் தடுக்கிறது. மண்ணில் மக்குரம் இல்லாமல் போகும்பொழுது அது சத்துக்களை இருத்திக்கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது.

அளவுக்கு அதிகமான நைட்ரோஜனிலிருந்து வெளிப்படும் பசுமைக்குடில் வாயு சீதோஷ்ண நிலையைக் கெடுக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், போலி நைட்ரோஜன்கள் உணவு உற்பத்தித் துறைக்குப் பாதிப்பை விளைவிப்பதோடு எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கிறது. தற்பொழுது நமக்கு இயற்கை விவசாயத்தில் அளவுக்கு அதிகமான உரம் தேவைப்படுகிறது. இதனைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் அல்லது பண்ணையிலிருந்து பெற வேண்டும். மண் வளத் தேவையை நிறைவேற்ற மிகச் சிறந்த ஒரு வழி சொந்தமாக எரு தயாரித்தலே. எரு தயாரித்தல் தொடர்பான தொழில்நுட்பங்கள் மலிந்து கிடக்கின்றன. இவை மண்ணை வளப்படுத்தும் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

இதில் காற்றோட்டமான முறையில் செய்யப்படும் எரு தயாரிப்பு மற்றும் காற்றில்லாத முறையில் மேற்கொள்ளப்படும் எரு தயாரிப்பு ஆகியவையும் அடங்கும். மண் புழு எரு தயாரித்தல் மற்றும் மக்கு-சாண எரு முறையும் இதில் அடங்கும். மண்புழு குளியல் நீர் மற்றும் பஞ்சகாவ்யா போன்றவை பயிர்களுக்குத் தெளிக்கப்படும் மிகவும் அருமையான பயிர் வளர்ப்பு ஊக்கியாகும். எதிர்கால சந்ததியினரின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு தற்போதுள்ள மண்ணின் தரம் மோசமாக இருக்கிறது. மலேசியாவின் மண்ணின் தரம் தொடர்பாக மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மலேசிய அரசாங்கம் இதனைச் செய்தே ஆக வேண்டும்.

இதற்குப் பிறகு, மண் வளத்தைத் திரும்பக் கொணருவதற்கான ஒரே தேசிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கை மலேசிய மண்ணைக் காப்பதோடு, மண்ணை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான உணவை அறுவடை செய்து மலேசிய மக்களின் நலத்தைக் காக்க முடியும்.

Posted on
Tuesday, October 27th, 2015
Tags:
Subscribe
Follow responses trough RSS 2.0 feed.
Trackback this entry from your own site.

No Comments Yet to “ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் காப்போம்”

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME