இயற்கை வேளாண்மையை நோக்கி

Add whatever you want here, or More about meE...

பாதுகாப்பான எதிர்காலத்திற்கு விதை சேகரிப்பு

இயற்கையின் மீதுஅலாதியான ஆர்வம்உடைய விவசாயி யாகப்பு அடைக்கலம், தன்னுடையவாழ்க்கையை ஆரம்பித்தது ஒரு உணவுக்கடை நடத்துநராக.அப்பொழுது அவருக்கு இருந்த ஒரே நோக்கம் தன்னுடைய உணவுக் கடையின் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்பதுதான். உணவுக் கடை தொடங்கிய சில காலங்களிலேயே தன்னுடைய இலட்சியம் நிறைவேறவில்லை என்பதை அவர் உணர்ந்தார். உணவு சமைப்பதற்காக தான் வாங்கும் ஒவ்வொரு காய்கறியும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி எச்சங்களை தாங்கி வருவதை அவர் உணர்ந்தார். இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் அவர்களோடு நெருங்கிப் பழகும் [...]

5ம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் நரம்பை அடிக்கும் நஞ்சு ________________________________

பத்திரிகைச் செய்தி 4.10.2015 “நியோ நிக்கோடினாய்ட்” (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, சாப்பிட விடாமல் செய்வது. வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது என பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளை விதையுடன் கலந்து மற்றும் பயிரில் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று [...]

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் நகர்ப்புற விவசாய திட்டத்தை விவசாய அமைச்சர் திறந்து வைத்தார்

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்கள் ஆற்றிய உரை உலகம் முழுக்க நகர்ப்புற விவசாயம் பிரபலமாகி வருகிறது. மலேசியாவிலும் மக்கள் நகர்ப்புற விவசாயத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். வீட்டுக்குப் பின் புறத்தில், கூரையின் மீது, மாடி முகப்பு, சாலை μரத்தில் விவசாயத்தை மேற்கொள்வது ஆகியவை நகர்ப்புற விவசாய முறைகளாகும். உலகம் முழுக்க மக்கள் உண்ணும் மொத்த உணவில் 15% நகர்ப்புறத்திலேயே விளைவிக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புக்கு நகர்ப்புற விவசாயம் ஆதாரமாக இருப்பதோடு [...]

கால்நடைப்பண்ணைகளில் எண்டிபையோட்டிக்

பண்ணைகளில் வளர்ப்புப்பிராணிகளிடையே நோயைத்தடுப்பதற்காக நிறைய எண்டிபையோட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்ணைகளில் பிராணிகள் நெருக்கடியாகவும், அசுத்தமான நிலையிலும், அவற்றுக்கும்அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலையிலும் வளர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்டபிராணிகளுக்கு நோய் தாக்காமல்இருக்க அவற்றின் தீனியில், நீரில் எண்டிபையோட்டிக் கலந்து கொடுக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு மிகவும் குறைவான அளவில் கொடுக்கப்படும் இந்த எண்டிபையோட்டிக்குகள் பண்ணைப் பிராணிகளிடையே உள்ள கிருமிகளிடையே எண்டி- பையோட்டிக்குகளை எதிர்க்கும் தன்மையை வளர்த்துவிடுகின்றன. பண்ணைகளில் இருக்கும் ஒருபிராணிக்கு நோய் வந்தாலேஎல்லாவற்றுக்குமே எண்டிபையோட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். இது எல்லாப் வளர்ப்புப் பிராணிகளுக்கும் நோய்வந்து பண்ணையாளருக்கு இழப்பு ஏற்படும் [...]

ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு மண் நலம் வேண்டும்

மண் என்பது எளிதில் புதுப்பிக்கப்பட முடியாத ஒரு வளம் ஆகும். ஒரு மனிதன் வாழும் காலகட்டத்தில் அதனைப் புதுப்பித்து விட முடியாது. நில அரிப்பு, மண் உவர்ப்பு, மண் இறுகிப்போதல், மண் அமிலத்தன்மை மற்றும் இரசாயன மாசுபாடு காரணமாக மண் தரம் 33% கெட்டுப்போய்விட்டதாக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். நிலத்தை குறுகிய கால கட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்துவது, மோசமான [...]

நீங்கள் உண்பது பிளாஸ்டிக்கா?

‘பிளாஸ்டிக் கரண்டிகளைக் கொண்டு உணவு சமைப்பதையும், பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு வகைகளையும் மற்ற பானங்களையும் சூடாக போட்டு வைப்பதையும் மக்கள் அறவே தவிர்த்துவிட வேண்டும்” என்கிறார் மலேசியாவில் செயல்பட்டு வரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ். இதுகுறித்து அவர் சொல்லும் தகவல்கள் நம்மை பிளாஸ்டிக் குறித்து மிகுந்த எச்சரிக்கை செய்கின்றன. ”சூடான உணவை பிளாஸ்டிக்கில் போடும்பொழுது அதிலிருந்து ரசாயனங்கள் உணவுக்குள் கசிகின்றன. பிளாஸ்டிக் உபயோகம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. உலக அளவில் பிளாஸ்டிக்கின் [...]

போபால் விஷவாயுக் கசிவு 20 ஆயிரம் உயிர்கள் பலியாகின இலட்சக்கணக்கானோர் பரிதவிக்கின்றனர்

போபால் விஷவாயுக் கசிவு சம்பவம்நடந்து 29 ஆண்டுகள் மறைகின்றன. டிசம்பர் 2ம் தேதி 1984ம் ஆண்டு உலகவரலாற்றில் ஒரு கறுப்பு தினம். யூனியன் கார்பாடு இந்தியாநிறுவனத்திலிருந்து வெளியான மிக என்ற விஷவாயு கசிவால் இன்று வரை 20ஆயிரம் பரிதாபமாக இறந்திருக்கின்றனர். இதில் பலர் புழுப்பூச்சிகள் போல்துடிக்கத் துடிக்க இறந்தனர். நிரந்த குருடர்களாக நடமாடுபவர்களின்எண்ணிக்கை நான்கு லட்சம் பேர் என அண்மைய பட்டியல் கூறுகின்றது.29 ஆண்டுகளுக்கு முன்பு விஷவாயுவை சுவாசித்து உயிர் பிழைத்த பெண்களின் இன்றைய நிலை கண்ணீரைவரவழைக்கின்றது.இவர்களுக்குப் [...]

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்து அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் அவர்களையும் பி.ப.சங்க நடவடிக்கைகளையும் கேட்டறிந்து மகிழ்ச்சியடைந்தார். பி.ப.சங்கம் மேற்கொண்டு வரும் இயற்கை விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளை பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் விளக்கிக் கூறியதை பேராசிரியர் மனநிறைவோடு கேட்டார். என்.வி.சுப்பாராவ் கல்வி அதிகாரி

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லிந்தாங் கோத்தா பெர்மாய், தாமான் கோத்தா பெர்மாயின் மூன்று அடுக்கு மாடி மேம்பாட்டுத் திட்டத்தால் அருகில் உள்ள வீடுகளில் வெடிப்பு

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லிந்தாங் கோத்தா பெர்மாய், தாமான் கோத்தா பெர்மாயில் மூன்று அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வரும் மேம்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு செபிராங் பிறை நகராண்மைக் கழகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். இந்த மூன்று அடுக்குமாடி கட்டுமானப் வேலைகள் ஏப்ரல் 2014ல் ஆரம்பிக்கப்பட்டன. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அருகில் உள்ள வீட்டுச்சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் செபிராங் பிறை நகராண்மைக் கழகத்திடம் [...]

குடிக்கும் நீர் சுத்தமானதாக பாதுகாப்பானதாக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் நீர் சுத்தமானதாக ஆரோக்கியமானதாக இருக்கும் பொருட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, உணவு சட்டம் 1985ல் சில விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிமுறைகளை சுகாதார அமைச்சு இன்னும் முறையாக அமலாக்கம் செய்யாதது குறித்து தாம் அதிர்ச்சி அடைவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளின் காரணமாக விற்பனை இயந்திரங்களிலிருந்து மக்கள் கொணரும் நீரில் ஆபத்தான பாக்டீரியாக்களும் இருப்பதாக பத்திரிகைச் செய்திகளிலிருந்து [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME